If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

பாகம்  2

பகுதி 4

திரு சுகுமாரன் நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார்.ருக்மணி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.பாமா தன் தந்தையிடம் சென்று “அப்பா எப்ப என் பெயரில் சொத்து எழுதி வைக்கப் போகிறிங்க”என கேட்டாள்.திரு சுகுமாரன் அதிர்ச்சியடைந்தார்.”இத்தனை நாளாக சொத்து பற்றி நீ பேசியதே இல்லையே இன்னிக்கு என்ன புதுசா?”என்று திரு சுகுமாரன் கேட்டார்.”அப்பா சொல்லுவதும் சரிதான் இன்னிக்கு என்ன புதுசா?” என ருக்மணியும் கேட்டாள்.”உன் திருமணம் முடிந்தப் பிறகு தான் உனக்கு வர வேண்டிய சொத்தைக் கொடுப்பேன்”என்றார் சுகுமாரன்.”என் திட்டம் நிறைவேராமல் போகிடுமோ”என்று மனத்திலே குழம்பிக்கொண்டாள் பாமா.டக்.....டக்....டக் என்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.ருக்மணி கதவைத் திறந்தாள்.

பகுதி 5

கண் முன்னால் தன் நெருங்கிய தோழி தேவி நின்றுக் கொண்டிருந்தாள்.”வா தேவி உள்ளே வந்து அமரு”என்றால் ருக்மணி.தேவி நாற்காலியில் அமர்ந்தாள்.”ருக்மணி நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், நான் இரண்டு நாள் வெளியூர்ப் போகிறேன் என் மகள் வாணியை நீதான் பாத்துக்கணும்”என்றால் தேவி.”சரி தேவி நான் பாத்துக்கறேன்”என்று கூறி தேவியை வழி அனுப்பி வைத்தாள்.வாணியை தன் அறைக்கு கூட்டிச்சென்றாள்.”அக்கா கதிர் மாமா எங்கே” என்று வாணிக் கேட்டாள்.அதற்கு ருக்மணி “மாமா சாமிகிட்ட இருக்காரு” எனக் கூறி வாணியை உறங்கவைத்தாள்.நள்ளிரவு மணி 12.00 ருக்மணி தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள்.கிரிங்....கிரிங்..என பாமாவின் கைப்பேசி ஒலித்தது.”சொல்லு கதிர் “என கைபேசியை எடுத்தாள்.”என்ன நடந்தது பாமா உன் தந்தை சொத்தை எழுதி வைக்கிறாரா?”என கதிர் கேட்டான்.”நம் திட்டம் நிறைவேறாதுனு நினைக்கிறேன்,ஏனென்றால் அப்பா என் திருமணம் முடிந்த பிறகுதான் எனக்கு வேண்டிய சொத்தைக் கொடுப்பார்’’என்றால் பாமா.”சரி நம் அடுத்த திட்டம் என்ன? பாமா” என்றான் கதிர்.”ருக்மணியை தந்தையிடம் பேசி எனக்கு வர வேண்டிய சொத்தை முதலில் எழுதி வாங்கிடப் போகிறேன் அதுதான் என் திட்டம் சரி நான் வைக்கிறேன் “ என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தாள் பாமா.பாமா பேசியது அனைத்தையும் வாணி மறைந்திருந்துக் கேட்டு கொண்டிருந்தாள்.பக்கத்தில் வாணியை காணவில்லை என்று ருக்மணித் தேடிக்கொண்டிருந்தால்.வாணியை பாமாவின் அறையின் முன்னால் பார்த்தாள் ருக்மணி.”வாணி இங்கே வா’’ என வாணியை கூப்பிட்டாள்.”வாணி எங்க போன எவ்வளவு நேரமா உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என ருக்மணி வாணியிடம் கேட்டாள்.”தாகமாக இருந்தது அக்கா,அதான் தண்ணிக் குடிக்க வந்தேன்”என வாணி கூறினாள்.” பாமாவின் அறையின் முன்னால் என்ன செய்துக் கொண்டிருந்தாய்? “என ருக்மணி வாணியிடம் கேட்டாள்.”பாமா அக்கா கதிர் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தேன்”என்றாள் வாணி.ஒரு கனம் வானத்தில் இடியே விழுந்தது போல் இருந்தது ருக்மணிக்கு.தொடரும்......

வாணி கூறியது உண்மைதான் என ருக்மணிக்கு தெரிய வருமா? பாமாவின் திட்டம் நிறைவேருமா?




Author

Kavin
Last Online: Sunday 19/08/18 | Published on: Monday 06/08/18

Kavin is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...





Size:      || Mode:               || PlayStyle:            || Play: