If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

பகுதி 1

பொங்.....பொங்......பொங்.....என சாலையில் வாகனங்கள் அலை மோதின,அமெரிக்காவில் இருந்து வந்த பாமாவிற்கு மிகவும் களைப்பாக இருந்தது.”அடடா இன்று ஏன் இவ்வளவு வாகனம்?”என்று மனத்திலே புளம்பி கொண்டிருந்தாள் பாமா.பாமாவின் தந்தை திருசுகுமாரன் ஒரு மருத்துவர் .பாமாவிற்கு ஒரு அக்காள் அவளின் பெயர் ருக்மணி.பாமாவும் ருக்மணியும் நகமும் சதையும் போல இருப்பார்கள்.ருக்மணிக்கு 2015 ஆம் ஆண்டு கதிருடன் திருமணம் நடந்தது.எப்படியோ வீட்டை வந்தடைந்தாள் பாமா.”என்ன வீட்டின் முன் இவ்வளவு செருப்பு இருக்கிறது?’’என்ற குழப்பத்துடன் வீட்டினுள் சென்றாள்.வீட்டினுள் அழுகைச் சத்தம் கேட்டது.ருக்மணி வெள்ளை சேலையை அணிந்து கொண்டு தன் கணவன் படத்திற்கு முன் வேகமாக அழுதுக் கொண்டிருந்தாள்.தன் அக்காவை 2 வருடங்களுக்கு பிறகு,இந்த கோலத்தில் சந்திததால் பாமா அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தாள்.காதில் பாமா...... பாமா....பாமா....என்ற ருக்மணியின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.சிறிது நேரம் கழித்து பாமா விழிகளைத் திறந்தாள்.கண் முன்னால் ருக்மணி நின்றுக் கொண்டிருந்தாள்.அக்கா என்று கூறி அவளை கட்டியணைத்தாள்.ஏன்னாசு அக்கா? என்ற கேள்விக்கு ‘’மாமா நம்மை விட்டு போய்டாரு பாமா’’ என்றாள் ருக்மணி.’’இன்று உன் மாமாவின் 16 ஆம் நாள் காரியம்’’என்று கூறிக்கொண்டே வாசல் கதவைப் பார்த்தாள் அங்கு திருசுகுமாரன் உள்ளே நுழைந்தார்.”எப்பமா வந்தே? என அவர் பாமாவிடம் கேட்டார்.’’இப்பதான் அப்பா ‘’என்றாள் பாமா.’’பார்த்தியாமா உன் அக்காளின் நிலையை’’என கவலையாக பாமாவிடம் கூறினார்.’’கவலைப்படாதீங்க அப்பா எல்லாம் சரியாகும்’’ என கூறிக்கொண்டே தன் அறையினுள் சென்றாள்.நள்ளிரவு

பகுதி 2

மணி 12:00 பாமா தன் அறையினுள் உறங்கிக்கொண்டிருந்தால்,

திடீரென்று கிரிங் ...... கிரிங் ...... கிரிங் ...... என கைதொலைப்பேசி ஒலித்தது..வேகமாக சென்று அதை எடுத்தாள். சொல்லு '', என்ன எத்தனவாட்டி சொல்லுறது இந்த மாதிரி நேரத்துல அடிகாதேனு சொன்னா புரியாத? என பாமா கூறினாள். '' நான் தான் உங்கிட்ட பேசரேனு யாருக்கும் தெரியாம பாத்துக்கே''என்றான் கதிர். '' இங்கே நீ இறந்துப்போய்டேனு எல்லாரு நினைக்கிறாங்க''என்றாள் பாமா. '' அதுதானே நம்ம திட்டம் நான் உன் அக்காளுக்கு தெரியாமல் உன்னை அமெரிக்காவில் திருமணம் செய்துக்கொண்டேன், அதுமட்டுமா உன் அப்பாவின் சொத்து எல்லாத்தையும் உன் பெரிலும் என் பெரிலும் எழுதிக் கொள்ளத்தானே உன்னை இந்தியா அனுப்பி ருக்கிறேன்''என்றான் கதிர். '' சரி ... சரி..நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன் இனிமே, இந்த மாதிரி நள்ளிரவுலே அடிக்காதே புரியிதா? ''. என்றால் பாமா''என்ன நடந்தாலும் எங்கிட்ட சொல்லு சரியா '' என்றான் கதிர். '' பாமா .... பாமா .. '' என்ற ருக்மணியின் குரல் கதவிற்கு வெளியே கேட்டது.

’’அக்கா கூப்பிடுகிறார்கள் நான் பிறகு பேசறேன்’’என்று அழைப்பை துண்டித்தாள்.கதவைத் திறந்தாள் பாமா,’’யாருக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தே? என்று கேட்டாள் ருக்மணி.’’கடவுளே வசமா மாட்டிக்கொண்டோமே’’என்று மனதிலே குழம்பிக் கொண்டிருந்தாள் பாமா.’’என் தோழியுடன் தான் பேசிக்கொண்டு இருந்தேன் அக்கா’’என பாமா பொய் சொன்னால்.’’சரி நீ சென்று உறங்கு எதோ சத்தம் கேட்டதே என்பதால்தான் கதவை தட்டினேன்’’என்று கூறி ருக்மணி தன் அறையினுள் நுழைந்தாள்.

 

பகுதி 3

சூரியன் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது.ருக்மணி காலையுணவை தயார் செய்துக் கொண்டிருந்தாள்.’’அம்மா....அம்மா’’என்று யாரோ வெளிய கூப்பிடுவது போல் இருந்தது. “யார் வந்திருக்கிறார்”என்று ருக்மணி வெளிய சென்று பார்த்தாள்.அங்கு ஒரு முதியவர் நெற்றியில் பட்டையுடன் கழுத்தில் ருத்ராட்ச்சமாலை அணிந்து நின்றுக்கொண்டிருந்தார்.”யார் வேண்டும் ஐயா? என்று ருக்மணி கேட்க”உன் கணவன் இறக்கவில்லை,இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்” என்று முதியவர் கூறி அங்கிருந்து வெளியேறினார்.முதியவர் கூறியது ருக்மணிக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.பாமா நடந்த அனைத்தையும் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இவருக்கு எப்படித் தெரியும் கதிர் உயிரொடுதான் இருக்கிறான் என்று “ மனத்திலே குழம்பிக்கொண்டிருந்தாள்.”இதை இப்படியே விடக்கூடாது எப்படியாவது சீக்கரம் அனைத்து சொத்தையும் எழுதி வாங்கிட்டு போயிரணும்”என்று பாமா கூறிக் கொண்டே வரவேற்பு அறைக்கு சென்றாள். தொடரும்......

தன் கணவன் இறக்கவில்லை என்று ருக்மணிக்கு தெரியவருமா? பாமாவின் திட்டம் நிறைவேருமா?




Author

Kavin
Last Online: Sunday 19/08/18 | Published on: Tuesday 31/07/18

Kavin is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

1. Anonymous (Rated 5/5) : ""





Size:      || Mode:               || PlayStyle:            || Play: