If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

 

 பச்சை பூசிச் செழித்திருக்கும் வயல் வெளியில் நெற் பயிராடும் அழகில் மனமும் ஆட உலாவினேன்... 

'களை'யொன்றும் களிப்பினில் ஆடக் கண்டேன் பயிரிடையினில்... விடுபட்ட களையோ வீறுபட்ட களையோ ... முளைத்து விட்டது வெற்றிகரமாக... 

களையைக் கண்டவுடன் கை அனிச்சையாக சென்றது பறிக்க... கையில் பிடித்துப் பார்த்தேன்..கழுத்தை இறுக்க தலையை தூக்கியவாறு பார்த்தது பச்சிளம் குழந்தையைப் போல்.... அதுவும் உயிர்தானே.. நெல்லைப் போன்று அதுவும் ஒரு உயிர் தானே.. நான் விதைக்கவில்லை...பாத்தி கட்டி பக்குவம் பார்த்து நான் வளர்க்கவில்லை...தானாய் தோன்றி தழைத்து நிற்கிறது சுயம்பாய்... 

உயிருக்கு ஒரு மதிப்புண்டு எனும் போது அதற்கு நான் என்ன ஈடு செய்வது...சிந்தனையில் மூழ்கும் போதே 'வெடுக்'கெனப் பிடுங்கினேன்...அது உயிரின் சத்தம்...கொலையின் நாதம்..வன்முறை 

ஆம் விவசாயம் வன்முறை... இதுவன்றோ உயிரியலின் இலக்கணம்... மனிதமும் உயிரியலன்றோ ???




Author

SasiG
Last Online: Saturday 18/08/18 | Published on: Friday 10/08/18

SasiG is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...





Size:      || Mode:               || PlayStyle:            || Play: