If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

கணிதப் பாடமன்று, கோடுவெட்டித்  தீர்த்து வைக்க 

அறிவியல் ஆய்வன்று, குறுக்குவெட்டில் சோதித்துக் கொள்ள

 சமூக நிகழ்வன்று,  வட்டம்கட்டிப்  பேசித் தீர்க்க 

 

அது, 

பிழைகள் கொண்டது, ஆதலால் இலக்கண நெறியன்று; 

விதிகள் கடந்தது, ஆதலால் இலக்கிய விதியன்று;

 

 கவிதை, 

பட்டப் படிப்பன்று,  பாமரனும் பாடப்பெறும்;  

 உவமைத் தொகுப்பன்று, நிதர்சனமும் நிறைந்திருக்கும்; 

தத்துவக் குறிப்பன்று, அபத்தங்களும் அறிந்திருக்கும்; 

தாள கதியன்று, அபசுரத்திலும் மகிழ்ந்திருக்கும்; 

 

கவிதை, ரசனையன்றி வேறு வரையறைக்குட்படாது, சர்வத்தையும் சுற்றி முற்றிலும் ஒற்றியிருக்கும் .

 

 கவிதை, 

காற்று, காசு, ஆகாயம், அணு, வெற்றி, தோல்வி, அரசு, அநீதி, உண்மை, உவமை, பொய், காதல் எனக் கண்ணில் பட்டுப் படாதவையெல்லாம் தொட்டு நிற்கும். தொடாமலும் நின்று விளங்க வைக்கும். 

 

தன்னையே கவிதைப்படுத்தி முகங் காட்டுவதால் கவிதை, கவிதையாகும். ஆம், யாவுமுற்ற கவிதையும் ஒரு கவியாகும்.




Author

SasiG
Last Online: Saturday 18/08/18 | Published on: Wednesday 01/08/18

SasiG is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...





Size:      || Mode:               || PlayStyle:            || Play: