If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

மனைவியரிடம் அல்லல் படும் கணவரை காப்பாற்ற, ஆணையம் அமைக்க வேண்டும்-ன்னு மகளிர் ஆணையமே கோரிக்கை வைத்தது பல பேரோட கவனத்தை திருப்பிருக்கு. வரதட்சணை கொடுமை,குடும்ப வன்முறை, திருமண பாலியல் வன்கொடுமை, விவாகரத்து, ஜீவனாம்ச மறுப்பு ன்னு பெண்களுக்கு திருமண வாழ்க்கைல ஏராளமான அச்சுறுத்தல்களும் ஆபத்துகளும் ஏற்படுது; அதுக்கான நிவர்த்தியா சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கு. ஆனா, இன்னொரு பக்கம் இதே போல ஆண்களுக்கும் ஏதோ ஒரு வித மன/உடல் தாக்குதல் மனைவி/மனைவி குடும்பத்தார் கிட்டேர்ந்து இருக்கும்ன்னு எத்தனை பேர் யோசிக்கறோம்? காலையில 4 மணிக்கே எழுந்து, வரிசைல நின்னு பால் வாங்கி, கார்ப்பரேஷன் குழாய்ல நின்னு பத்து குடம் தண்ணி பிடிச்சு வெச்சு, தன் துணி, குழந்தைங்க, பொண்டாட்டி துணியெல்லாம் துவைச்சு, இடையில பிள்ளைகளுக்கு ஸ்கூல் கிளம்ப தயார்ப்படுத்தி , காய்கறி நறுக்கி, சாப்பாடையும் குழம்பையும் அடுப்புல மட்டும் வெச்சு கிண்டு மா-ன்னு மனைவிக்கு கோரிக்கை வெச்சுட்டு, குளிச்சு கிளம்பி ஆபீஸ் போவாங்க. ஓயாத அலைச்சல், வேலை, pressure, டென்ஷன் எல்லாம் ஆபீஸ்-ல இருக்கும். சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்தா போதும்; ஒரு காபி கிடைச்சா போதும்-ன்னு நினைப்பு வரும். ஆனா, குளிச்சிட்டு மறுபடியும் ராத்திரி உணவை தயார் செய்து, பிள்ளைகளை வீட்டுப்பாடம் செய்ய வெச்சு, மனைவிக்கும் சாப்பாடு கொடுத்து, பாத்திரம் எல்லாம் விளக்கி வெச்சுட்டு தூங்கப்போறப்போ மணி 11 ஆகும். அடுத்த நாள், அதே ஓட்டம், அதே வேகம்! இதெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான்னு நினைக்கறோமா? எவ்வளவோ வீட்டுல ஆண்கள், பெண்களோட ஒத்துழையாமை போராட்டத்துல, குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது-ன்னு அமைதியா எல்லாம் வேலைகளையும் தானே செஞ்சு, மனைவியை பொறுத்துக்குவாங்க. என்னதான் கைநிறைய சம்பாதிச்சாலும் மனைவிகள் தங்களோட சம்பாத்தியத்தை வீட்டுச்செலவுக்கு புருஷனையே எதிர்பார்க்கறாங்க; அவங்க பணத்தை சேமிக்க மட்டுமே செய்யறாங்க. இதன் விளைவா மொத்த குடும்பத்துக்கும் தான் ஒருத்தன் மட்டுமே சம்பாதிக்கற நிலைக்கு தள்ளப்படறாரு கணவன். ரெண்டு வீட்டு விசேஷம், குழந்தைங்க படிப்பு, மருத்துவ செலவு, காய்கறி, துணிமணி, சுற்றுலா-னு ஒரு நடுத்தர வர்க்கத்தோட செலவு ஒரு நபர் மேல திணிக்கப்படுது பெரும்பாலும்; மனைவியும் சம்பாரிச்சாலுமே கூட! இது போக, வீட்டு வேலைகள் சரியா செய்யல, என் தோழியோட கணவன் மாதிரி நீங்க பாக்க அழகா இல்ல, சாமர்த்தியம் பத்தலை ன்னு வசவுகளும், ஏச்சு பேச்சுகளும் கேக்கணும். எதுக்கு கோபப்படறாங்க எதுக்கு அழறாங்கன்னே தெரியாம மனைவியை சமாதானப்படுத்தணும். வெளிய கூட்டிட்டு போகணும், செலவு பண்ணனும். இவ்வளவும் பண்ணியும் திட்டும், சில சமயம் அடியும், பல சமயம் “அம்மா வீட்டுக்கு போறேன்”-ங்கிற ஆயுதமும், “செத்து தொலையறேன்”-ங்கிற அதிர்ச்சி வைத்தியமும் வாங்கணும். நடுத்தர வர்க்க கணவனா இருக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. அம்மாக்கள் மதிக்கறதை பாத்துதான் பிள்ளைகள் அப்பாக்களை மதிப்பாங்கன்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி சூழல்ல, பிள்ளைகளும் வளர வளர அம்மாக்களுக்கு ஆதரவா பேசறது, அப்பாக்களுக்கு ஒரு கனத்தை கொடுக்கும். மனைவி வீட்டுலேர்ந்தும், மனைவி செய்யறது தவறுனே புரியாம, அதுக்கான ஊக்குவிப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கே இருக்கற நெருக்கம், அரவணைப்பு, காதல், காமம் எத்தனை ஆண்களுக்கு தேவையான முறையில கிடைக்குது? nighty-ல, கொண்டையில தூங்கி வழிஞ்சிட்டு இருக்கறப்போ கூட , கணவர்களுக்கு மனைவிகள் அழகா தெரிவாங்க. அன்பா ஒரு முத்தம் குடுக்கலாம்ன்னு பக்கத்துல வந்தாக்கூட, இதுக்கு மட்டும் நான் வேணுமா ன்னு அந்த காதலையும் காமத்தையும் கொச்சைப்படுத்தறப்போ, கணவர்களுக்கு தன்மேலேயே ஒரு வெறுப்பு வந்துடும். இதனோட தொடர்ச்சியா, ஏதாவது ஒரு சமயம் மனைவிகளே கணவனை நாடறப்போ, அது மறுக்கப்படுது; பிரச்சனைகள் உருவாகுது. விரிசல் அதிகமாகுது. காமம், உடல் தேவை மட்டுமில்ல, மனத்தேவையும் கூட. இதை எவ்ளோ பேர் உணர்றாங்க? இவ்வளவு இருந்தும், கணவர்கள் ஏன் மனைவிகளை விட்டு கொடுக்காம இருக்காங்க? ரொம்ப சாதாரணம். குடும்பம் பிரியக்கூடாது, பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடாது. எல்லாத்துக்கும் மேல, என்னதான்ன்னாலும், மனைவி இல்லையா? வீட்டுக்குடுக்க முடியுமாங்கிற நினைப்பு. அப்படிப்பட்ட கணவர்களுக்கு மனைவிகளோட சேர்ந்து அன்பா அன்னியோன்னியமா வாழ ஆசை இருக்கும். ஆனா பதிலுக்கு அவங்களுக்கு வெறுப்புதான் கிடைக்கும். அவங்களை ஆதரிக்கவும், காப்பற்றவும்தான் ஆணையம் உருவாக்கப்படணும் ன்னு கோரிக்கை வெச்சிருக்காங்க. கணவர்களுக்கு வேண்டியது, காயப்படுத்தும் மனைவிகளிடம் இருந்து விடுதலை அல்ல, அவர்களின் அன்பும் அரவணைப்பும் தான்!
Author

Ranjitha Ravindran
Last Online: Friday 17/08/18 | Published on: Monday 06/08/18

Ranjitha Ravindran is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...

Size:      || Mode:               || PlayStyle:            || Play: