If you are an avid Reader, Click Here to Sign in. Create bookmarks, post comments, engage in discussion with authors and other readers, increase your knowledge, proficiency in language, earn points and compare and share with others.

ஒரு நாளாவது சாப்பாட்டை மிச்சம் வைக்காம இருக்கியா? ஏன் இவ்ளோ லேட் ? ஏதாவது தின்னு தொலைச்சியா இல்லையா? ஒரு நாள் அந்த phone ah தூக்கி எரிய போறேன் பாரு.. இந்த வசனங்களை எல்லாம், எல்லார் வீட்டுலயும் கேட்டிருக்கலாம். நம்ம அம்மாக்கள் சொல்ற வசனங்கள் தான். சினிமால வர்ற மாதிரி அம்மான்னா வெறுமனே சமைச்சு போட்டுக்கிட்டு, நம்மளை அன்பு மழைல முக்கி எடுக்கறது தான் அவங்க வேலையா என்ன? அதையும் தாண்டி இந்த மாதிரி வசவுகளும் கேட்கப்படும்.தினமும் வீட்டுல நம்ம சண்டை போடற ஒரு ஆள், வாக்குவாதம் பண்ற ஒரு நபர் நம்ம அம்மாவை சொல்லலாம். ஆனாலும், ஒரு நாள் வீட்டுல நம்ம அம்மா இல்லைனாலும் வீடு வீடா இருக்காது. அதுதான் அம்மாக்களோட சாரம்சமே! பசங்களை விட , அம்மாக்கள் பொண்ணுங்க கூட நிறைய நேரம் செலவழிப்பாங்க . அவங்க உடை அலங்காரம், உணவு பழக்கங்கள், தோழிகளோட பேச்சு, வேலையிடத்தில் வர்ற சிக்கல்கள், உடல் நல கோளாறுகள், ஆண் நண்பர்கள், அவங்க காதல், திருமண வாழ்க்கை எல்லாத்தை பத்தியும் அவங்க சுலபமா பகிர்ந்துக்க கூடிய ஒரு நபர் அவங்க அம்மா தான்! உருவத்துக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கறதும், தவிர்க்கறதும், ஆனா அதே சமயம் ஆரோக்கியத்தில சமரசம் பண்ணாம இருக்கறதுக்கு, பெண்களுக்கு அவங்க அம்மாக்கள் கிட்டே இருந்து தான் பெரும்பாலும் வரும். அவங்க ஆளுமை திறன், சுய மேம்பாடு, கலை ரசனை, எல்லாத்துக்கும் அவங்க அம்மா ஒரு வடிகாலா , வாசலா இருப்பாங்க. பொண்ணுங்க அப்பா செல்லமா இருக்கலாம், கூட பிறந்தவங்க, நண்பர்கள் ன்னு பல பேர் அவங்களுக்கு நெருக்கமா இருக்கலாம். ஆனா ஒரு பிரச்சனை ன்னு வந்தா , அவங்க நாடற முதல் நபர் அவங்க அம்மாவா தான் இருப்பாங்க. பருவ வயசில பின் தொடர்ற பையனை பத்தின புகார், ஸ்கூல் ல வாத்தியார் எல்லார் முன்னாடியும் திட்டினது, பருவத்தை அடையறது, முதல்ல வாங்கின காதல் கடிதம், இப்படி பட்டியல் நீளும். இதே பொண்ணும் அம்மாவும் பேசறப்போ , சில சமயம் முற்றின சண்டை போட்டுக்கறாங்களோன்னு கூட தோணும். அப்படி ஒரு வாக்குவாதம் வரும்,ஆனாலும் ஒரு மன்னிப்பு கூட கேக்காம, கொஞ்ச நேரத்தில இயல்பாயிடுவாங்க. அது அம்மா மகளுக்கு தான் சாத்தியம். அம்மா, தன்னோட மகனையோ, கணவனையோ ஆதரிச்சு பேசறது போல இருக்கும். ஆனாலும் மறைமுகமா அவங்க ஆதரவு தன்னோட மகளுக்கு முதன்மையா இருக்கும். download முதல் தடவை புடவை கட்டி விடறது, சமைக்க கத்து தர்றது, உடம்பு சரியில்லாதப்போ கழிவறை உபயோகிக்க உதவறது, இப்படி எல்லா விஷயங்கள்லயும் மகள்களுக்கு அம்மாக்களோட அருகாமை அவசியப்படுது. அதே சமயம், தாமதமா வீட்டுக்கு வர்ற சூழல்ல தைரியமும் குடுத்து, அதே சமயம் கண்டிக்கவும் செய்யறது அம்மாக்கள் தான். சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கறது, தவறான நட்பை முறிச்சுக்கறது, நிதி மேலாண்மையை அறிமுகப்படுத்தறது ன்னு மகள்களோட மேன்மைக்கு பல விதங்கள்ல விதை அம்மாக்கள் தான். எத்தனையோ தடவை, அவங்க தோழிகளோட வெளியே போறப்போ, விடுதில தங்கறப்போலாம் அவங்க பெரிசா எதையும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா மகள்கள் திருமணம் ஆகி, அவங்க கணவனோட வேறு இடத்துக்கு போறப்போ, அப்போ தான் அவங்க ஒரு வெற்றிடத்தை உணருவாங்க. அவங்க அம்மாக்களை நினைவுக்கூர்வாங்க. அவங்க மூலமா ஒரு பேத்தியை பெறும் போது, அவங்க ஒரு நிறைவை உணருவாங்க. ஆனாலும், குடும்ப அமைப்புகள் ஒண்ணோட ஒண்ணு பிணைஞ்சுருக்கறது உண்மைதான். இங்க ஒரு பெண் தன்னோட வாழ்க்கை துணையை சுயமா தேர்ந்தெடுக்கவோ, அல்லது ஓரின சேர்க்கையாளரா இருக்க பிரியப்படவோ, தன் பாலினத்தை தேர்ந்தெடுக்கவோ அனுமதிக்கபடறதில்லை. இந்த மாதிரியான நேரத்தில அன்பான அம்மாக்கள் கூட சில பேருக்கு எதிராளியா தெரியலாம். ஆணவ கொலைகளும், பாலியல் விடுதிகளும் பெறுக, ஒரு சில அம்மாக்களோட தவ றான புரிதல்களும், வாழ்வியலும் கூட காரணிகள் தான். ஒரு வயசுக்கு மேல பெண்கள் நிச்சயம் திருமணம் செஞ்சுக்கணும், அடுத்து குழந்தை பெத்து குடுக்கணுங்கிற கட்டாய திணிப்புக்கு நடுவுல , உலகம் முழுக்க தனியா பயணிக்க, கலப்பு திருமணம் செய்துக்க, வேற நாட்டுக்கு குடி புக , தன் மகளை ஊக்குவிக்கற, கவனிக்க! அனுமதிக்கற இல்ல, ஊக்குவிக்கற அம்மாக்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொரு கட்டத்திலயும், அந்த ஊக்களிப்பு அளிக்கற அம்மாக்கள் மகள்களோட வாழ்வை அழகாக்கறாங்க, மகள்கள் அந்த அம்மாக்களோட வாழ்வை அர்த்தமுள்ளதாக்கறாங்க.
Author

Ranjitha Ravindran
Last Online: Friday 17/08/18 | Published on: Saturday 04/08/18

Ranjitha Ravindran is the author of this content.

Share this page and spread the word!

Liked the Article? Review it here:

1       2       3       4       5      

Reader Reviews and Feedback:

No Reviews Yet...

Size:      || Mode:               || PlayStyle:            || Play: